Map Graph

விசயராகவப் பெருமாள் கோவில்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில்

விசயராகவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புட்குழி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோயிலாகும். இது காஞ்சிபுரத்திற்கு மேற்கே 7 மைல் தொலைவிலும், சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திராவிடக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இக்கோயில், கிபி 6-9 ஆம் நூற்றாண்டுகளில் பெருமாளைக் குறித்து ஆழ்வார்களால் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விஷ்ணுவை ‘விசயராகவப் பெருமாள்’ என்றும் அவரது மனைவி இலட்சுமி ‘மரகதவல்லி தாயார்’ என்றும் போற்றப்படுகிறார்.

Read article
படிமம்:Tirupukuzhi1.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Tirupukuzhi2.jpgபடிமம்:Commons-logo-2.svg